எழுபது ஆண்டுகள் கடந்தும் நிலத்திற்கு பட்டா கொடுக்காத கேரளா அரசு??

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரை சுற்றியுள்ள பகுதிகளில் தேயிலை மற்றும் விவசாய கூலித் தொழிலாளிகளாக 1950 முதல் 1980 வரை இடம் பெயர்ந்த மக்களுக்கே இன்றுவரை உபயோகப்படுத்தபட்டுவரும்  நிலத்திற்கு சொந்தமாக பட்டா  கொடுக்காமல் இழுத்தடிப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் ஒரு ஏக்கருக்கு குறைவாக உள்ள  விவாயிகளுக்கு கூட பட்டா எட்டாக்கணியாக உள்ளது. இதில் மிகவும் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் அதிக அளவில் ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளவர்களுக்கு கேரளா அரசால் பட்டயம் கொடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மலை அடிவாரம் பகுதியில் வசிக்கும் மக்கள் வருடத்தில் தென் மேற்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை மற்றும் பல  சீரழிவுகளினாலும் நிலத்தின் விவசாயம் பாதிக்கப்படும் போது. பட்டா இல்லாத காரணத்தினால் அரசு இடமிருந்து கிடைக்கும் எந்த  பலனும் கிடைப்பதில்லை என்பதையும் வேதனையுடன் கூறுகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

எனவே கேரளா அரசு இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக பட்டா கிடைக்காத, பட்டாவேண்டி அரசிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்த அனைவருக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என மக்கள் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments