தூத்துக்குடி மேயருடன் குரூஸ் பர்னாந்து பேத்தி சந்திப்பு!!

   -MMH 

   தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டம் கட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றிய மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து குரூஸ் பர்னாந்து பேத்தி ரமோலா நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி நகர்மன்ற தலைவராக குரூஸ் பர்னாந்து பணியாற்றிய காலத்தில் நகர மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் வல்லநாட்டிலிருந்து குழாய் மூலம் குடிதண்ணீர் பொதுமக்கள் குடிப்பதற்கு அவர் காலத்தில் கொண்டு வந்தார். அதனால் அவரை குடிநீர் தந்த கோமான் என்று தூத்துக்குடி மக்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சியில் பொறுப்பேற்றபின் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் குரூஸ் பர்னாந்துக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான எம்.ஜி.ஆர் பூங்கா பகுதியில் 21 செண்ட் இடம் ஓதுக்கப்பட்டு கடந்த மாதம் 31ம் தேதி அதற்கான தீர்மானம் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து நேற்று குரூஸ் பர்னாந்து பேத்தி ரமோலா மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதற்கு பதிலுரை வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர மக்களுக்கு நல்லதொரு பணியாற்றிய குரூஸ்பர்னாந்துக்கு மணி மண்டம் கட்டுவதற்கான தீர்மானம் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கி நிறைவு பெற்று திறப்பு விழா காணவிருக்கும் நிலையில் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நான் பெருமையாக கருதுகிறேன் என்றார்.

குரூஸ்பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன்கில்ட், முன்னாள் பேராசிரியர் பாத்திமாபாபு, எழுத்தாளர் நெய்தல் அண்டோ, நற்பணி மன்ற பொருளாளர் டெரன்ஸ், துணைத்தலைவர் சில்வா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முத்தரசு கோபி ஶ்ரீவைகுண்டம். 

Comments