கோவை குற்றால அருவியில் குளிக்க தடை!!

 -MMH 

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றால அருவி உள்ளது.  இந்த அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அருவிக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது. மேலும் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க சாடிவயல்  வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அருவியில் வெள்ளப்பெருக்கு  குறைந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள்  அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments