தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக சி.த.செல்லப்பாண்டியன் நியமனம்!!

-MMH

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சி.த.செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். அப்போது ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் அதிமுக மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அமைப்பபு செயலாளராக நியமனம் செய்தார். இபிஎஸ் ஓபிஎஸ் என இரு அணிகள் பிரிந்து தனித்தனியாக தற்போது செயல்படுகின்றனர். இரண்டு தரப்பினரும் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்திலும் சில உரிமைகளை சொந்தம் கொண்டாடி தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பினரும் கொடுக்கப்பட்ட மனுக்களும் நிலுவையில் இருந்து வருகின்றன. 

இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான ஒ.பன்னீர் செல்வம், "தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி அடங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக சி.த.செல்லப்பாண்டியனை நியமனம் செய்துள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். மேலும்,  அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 ஶ்ரீவைகுண்டம் நிருபர்

-முத்தரசு கோபி.

Comments