நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது!

 

-MMH

திரையுலக ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

தமிழகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது ரசிகர் மன்றம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கோவையில் கோவில்களில் அவருக்கு பிரார்த்தனை  மற்றும் அர்ச்சனை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றதின் தொடர்ச்சியாக கோவை ஒலம்பஸ் பகுதியிலுள்ள கை கொடுக்கும் கை ரஜினிகாந்த் அறக்கட்டளையின் சார்பாக, 

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு 2000க்கும் மேற்பட்ட ஏழை,எளிய மக்களுக்கு கிடா விருந்து அளிக்கப்பட்டது. இதுபோல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் வார்டு செயலாளர் எம்.ஆர் கண்ணன், மண்டல செயலாளர் சுனில், மத்திய மாவட்ட இணை செயலாளர் ஒலம்பஸ் சசி, மாவட்ட செயலாளர் கே.எம்.செல்வராஜ், மருதாச்சலம், நவரசு,வினோத், ஜெகதீஷ், ராஜ்குமார், மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், பாபு, பிரவீன், கே.எஸ்.ரவி, காலனிசெல்வம்,  செரிப், கே.கே.ரவி  பொது மக்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

-சீனி போத்தனூர்

Comments