ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் சென்ற கார் லாரி மீது மோதி விபத்து!!

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த திருவேங்கடம் அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் திருச்செந்தூருக்கு காரில் வந்துவிட்டு திரும்பி ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த கார் முள்ளக்காடு பழையகாயல் இடையே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த பால்முத்து பிரபு (39) மற்றும் கந்தையா மனைவி தமிழ்செல்வி (69) ஆகிய 2 பேரும் சமபவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த பாண்டிசுதா சற்குன லில்லி (37) என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். 

 https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Comments