இடுக்கி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொடூர கொலைகள் !!!

   -MMH 

   கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதுவும் இந்த வருடத்தில் மற்ற ஆண்டுகளை விட அதிகமான கொலைகள் நடந்துள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு 26 கொலை சம்பவங்களும் 30 கொலை முயற்சி சம்பவகளும் 2021- ல் 15 கொலை சம்பவங்களும் 41 கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.


இந்த வருடம் கடந்த 23ம் தேதி சின்னம்மா கேஸ் சிலிண்டர் வெடிததாக கூறப்பட்ட கொலை,கடந்த வெள்ளிக்கிழமை யானை சவாரி விமல் கொலை, கடந்த மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர் கொலை செய்யப்பட்டார், கா ரமேஷ் கொடூர கொலை, சிறு குழந்தையை நீரில் மூழ்கடித்து கொலை செய்த அம்மா,உடும்பனூர் அப்துல் சலாம் கொலை மற்றும் தட்டு கடையில் துப்பாக் கியால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞர் இப்படியே அடுக்கி கொண்டு போகலாம்.

இதில் அதிகமான கொலைகள் விபத்துகளாகவே சித்தரிக்கப்பட்டன. ஆனால் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இப்படி அதிகரித்து வரும் கொலையால் இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மனிதர்களுக்கு இடையே அன்பு மறைந்து வருவதும் சுலபமான வழியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்வதும் தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட காரணமாக இருந்து வருகிறது என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன்.
மூணார்.

Comments