சிறை கைதிகளை கண்காணிக்க புது வியூகம்?! உடனடியாக அமல்படுத்த முடிவு!!

-MMH 

கோவை: சிறைகளில் உயர் பாதுகாப்பு செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதில் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகின்றது.

என உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது சிறைகளில் நடக்கும் விதிமீறல்கள், கைதிகளின் அத்துமீறிய செயல்கள் வெளியில் தெரியாமல் மூடி மறைக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் நோக்கத்துடன் தமிழக சிறைத்துறை சார்பில் காவலர்கள் உடையில் அணியும் வகையிலான, 50 நவீன கேமராக்கள், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள், தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட உள்ளன, சென்னை புழல் மத்திய சிறை காவலர்களுக்கு கேமரா வழங்கப்பட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கோவை மத்திய சிறை காவலர்களுக்கு, கேமரா வழங்கப்பட உள்ளது. உயர் பாதுகாப்பு கொண்ட செல்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை கண்காணிப்பதற்கு செல்லும் காவலர்கள், இந்த கேமராக்களை அணிந்திருப்பர், இந்த கேமராக்களில் படம் பிடிக்கப்படும் வீடியோ காட்சிகளை, சிறையின் தலைமையகத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும் என்று  கோவை மத்திய சிறை துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments