' வனத்துக்குள் திருப்பூர்' ஐஜி விளக்கம்.

     -MMH 

   திருப்பூர் : ''தொழில் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தியவர்களை, பொதுநலன் சார்ந்த மாற்றுப்பாதைக்கு, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் திருப்பியுள்ளது,'' என, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் பேசினார்.'வனத்துக்குள் திருப்பூர் -8' திட்ட விழா, திருப்பூர் மங்கலத்தில் நேற்று நடந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

வெற்றி' அமைப்பின் தலைவர் சிவராமன் வரவேற்றார். கோவை மண்டல ஐ.ஜி., சுதாகர், திருப்பூர் எஸ்.பி ஷெசாங் சாய் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். ஐ.ஜி., சுதாகர் பேசியதாவது: "நல்ல மாற்றத்தை உருவாக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தால், 15.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மேம்பாடு, நொய்யல் பராமரிப்பு என்ற நோக்கத்துடன் 'வனத்துக்குள் திருப்பூர்' நல்ல சிந்தனைகளையும் விதைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தியவர்களை, பொதுநலன் சார்ந்த மாற்றுப்பாதைக்கு திருப்பியுள்ளது இத்திட்டம். திட்டக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அறப்பணி திருப்பூரை போல், மற்ற மாவட்டங்களிலும் பர வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

நாளைய வரலாறு செய்திக்காக

- பாஷா

Comments