லிப்ட் கொடுப்பது போல் நடித்து முதியவரிடம் நூதன திருட்டு!!

 

    -MMH 

லிப்ட் கொடுப்பது போல் நடித்து முதியவரிடம் நூதன திருட்டு!!

   கோவை தெலுங்கு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி என்பவரது மகன் 70 வயதான மாணிக்கம். இவர் நில சம்பந்தமான வழக்கு ஒன்றுக்காக தனது வழக்கறிஞரை சந்திப்பதற்காக கோவை கோபாலபுரம் பகுதிக்கு நேற்று வந்தார். அப்போது ரயில் நிலையம் அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பேருந்து நிலையம் அருகே அவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு பேருந்து வரவே அதில் அவர் தெலுங்குபாளையம் பகுதிக்கு செல்வதற்காக ஏறியுள்ளார், பஸ்ஸில் கண்டக்டர் தெலுங்குபாளையம் பகுதிக்கு இந்த பஸ் செல்லாது எனக் கூறியதை அடுத்து மாணிக்கம் கீழே இறங்கினார். 

அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மாணிக்கத்திடம் நானும் தெலுங்கு பாளையம் பகுதிக்கு தான் செல்கிறேன் என்று அறிமுகமான நபர் போல பேசி உள்ளார். இதை நம்பி மாணிக்கமும் அவருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார். ராஜவீதி பகுதியில் உள்ள வீராசாமி பள்ளி அருகே ஸ்கூட்டர் சென்று கொண்டிருந்த பொழுது ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற மர்ம நபர் தனது உரிமையாளர் இங்கு இருப்பதாகவும் அவரை பார்த்துவிட்டு செல்லலாம் எனக் கூறியிருக்கிறார். இதை நம்பிய மாணிக்கம் தாராளமாக பார்த்து விட்டு செல்லலாம் என கூறி இருக்கிறார். உடனே அந்த மர்ம நபர் தனது உரிமையாளருக்கு தங்க நகைகளை கண்டால் பிடிக்காது எனவும் மேலும் மோதிரத்தை கழற்றி ஒரு பேப்பரில் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்,பிறகு அதை அணிந்து கொள்ளுங்கள் என கூறி இருக்கிறார். 

இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர் ஒரு பேப்பரை கொடுத்து மாணிக்கம் கையில் அணிந்திருந்த இரண்டு அரை பவுன் மோதிரத்தை கழற்றி வாங்கி மடித்து கொடுத்துள்ளார், பின்னர் மாணிக்கத்திடம் நைசாக பேசி அங்கிருந்து அந்த மர்ம நபர் நழுவிச் சென்றார். சிறிது நேரம் கழித்து மாணிக்கம் அந்த மர்ம நபர் வராததை அடுத்து அவர் கொடுத்துச் சென்று இருந்த பொட்டலத்தை பிரித்துப் பார்த்தார்.  அந்த பொட்டலத்தில் மோதிரம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து மாணிக்கம் வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments