மாணவர்களுக்காக மின் கம்பத்தில் மின் விளக்கு அமைத்து தந்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!

 

   -MMH 

   கன்னியாகுமாரி மாவட்டம்,தோவாளை தாலுகா பூதப்பாண்டி சர்.சி.பி.அரசு 

மேல் நிலைப்பள்ளி அருகில் உள்ள  சாலையின்  திருப்புமுனையில் பள்ளமாக உள்ளது.

இப்பகுதியில் இரவு நேரங்களில் இருள்சுழ்ந்த நிலையில் கீழிருந்து மேலே வாகனத்தை ஓட்டி வருபவர்கள் மிகவும்  சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் பள்ளி மாணவ மாணவிகளும் டியூசன் படித்து வருகையில் இருள்சூழ்ந்து இருப்பதால் அச்சம்கொள்கின்றனர். 

எனவே பள்ளி மாணவ மாணவிகளின் நலன்கருதியும்,வாகன ஓட்டிகளின் நலன்கருதியும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக பூதப்பாண்டி 

சர்.சி.பி. அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்கு பொருத்திட நடவடிக்கை மேற்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமாரி  மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.நாராயணசாமி கூறுகையில்; 

"தெருவில் விளக்குகள் இல்லை என்றால், இது வழிப்போக்கர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் அதிக ஆபத்தை உருவாக்குகிறது இந்த ஆபத்திலிருந்து பொதுமக்களை காத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்" என்றார். 

நாளைய வரலாறு செய்திக்காக,

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments