தூத்துக்குடியில் போதிய டிரைவர்கள் நடத்துனர்கள் இல்லை!!!.

 

    -MMH 

தூத்துக்குடியில் போதிய டிரைவர்கள் நடத்துனர்கள் இல்லை!!!.

  தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளையில் போதிய டிரைவர்கள் நடத்துனர்கள் இல்லாத நிலையில் கிளை மேலாளர் கூடுதல் நேரம் பேருந்தை இயக்க சொல்லுவதால் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு போதிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை உள்ளது இதன் காரணமாக புறநகர் கிளையில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை உள்ளூரில் பேருந்து இயக்கி விட்டு கூடுதல் நேரமாக மதுரை திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை இயக்க ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கிளை மேலாளர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கூடுதல் பணி சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி பேருந்தை இயக்கும் ஓட்டுநர்களால் தொடர் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் கிளை மேலாளர் சுரேஷ் ஊழியர்களை தரக்குறைவாக பேசி வருவதுடன் பேருந்துகளை அதிக கிலோமீட்டர் தூரம் இயக்கச் சொல்லியும் பேருந்துகளுக்கு உரிய உதிரிபாகங்களை முறையாக வழங்காமல் அராஜக போக்கில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அவ்வப்போது பேருந்துகள்  பேட்டரி பிரச்சினை என்று பல்வேறு வகையில் போக்குவரத்து கழகம் சந்தித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளான தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் கிளையைச் சேர்ந்த போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜிடம் கிளைமேளாளர் சுரேஷை உடனடியாக பணி மாற்றம் செய்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மனு அளித்தனர். போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான அரசுபோக்குவரத்து ஊழியர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 -முனியசாமி ஓட்டப்பிடாரம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Comments