ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் திடீர் ஆய்வு!!

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மின்னணு தேசிய வேளாண் சந்தையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் டிசம்பர் 20ஆம் தேதி இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் சாவித்திரி அவர்கள் திடீர் திடீரென வருகை புரிந்து ஏலத்திற்கு வைக்கப்பட்ட தேங்காய் கொப்பரை வகைகளை பார்வையிட்டு கொப்பரைத் தரங்களை ஆய்வு செய்தார். அதனை அடுத்த விவசாயிகளுக்கு கூறியதாவது:

"இ-நாம்' ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் சரியான எடை, இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லை, விவசாயிகளுக்கு வங்கியின் மூலமாக உடனடியாக பண வரவு வைக்கப்படுகிறது. 

மேலும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை களத்தில் தேங்காய் கொப்பரைகளை உலர வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தைஏலத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை கூறினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும், இங்கு பல தரப்பட்ட  கொப்பரை வரத்து வருவதால் ஏலம் இ-நாம்' ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நடைபெறுவதால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கூறினார். 

-அலாவுதீன், ஆனைமலை.


Comments