முதல்வர் திறந்தார்... கடை திறக்கவில்லை 'நறுமணம்' வீசாத பூ மார்க்கெட்!

 

-MMH

திருப்பூர், டிச. 22-திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், காமராஜ் ரோடு பழைய பஸ் ஸ்டாண்ட், அதனருகே பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம், ஈஸ்வரன் கோவில் வீதியில் பூ மார்க்கெட் வளாகம் ஆகியன கடந்த மாதம் 21ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பார்க்கிங் வளாகம் ஏற்கனவே ஏலம் முடிவடைந்த நிலையில், உடனடியாக பயன்பாட்டுக்கு திறந்து செயல்படுத்தப்பட்டது. அதே நாளில் திறக்கப்பட்ட பூ மார்க்கெட் வளாகம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

முன்னர் இருந்த பூ மார்க்கெட் வளாகம் முற்றிலும் அகற்றி, 5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில், 86 கடைகள், பொதுக்கழிப்பிடம் மற்றும் வாகன பார்க்கிங் உள்ளன. இந்த வளாகத்துக்கான ஏலம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் கட்டி முடித்து திறப்பு விழா நடந்தும் பூ மார்க்கெட் வளாகம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் வீணாகி வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாஷா.

Comments