பொள்ளாச்சி வழியாக தினசரி இயக்கப்படும் மதுரை - கோயம்புத்தூர் ரயில் வேகம் அதிகரிப்பு!!

 

பொள்ளாச்சி    -MMH 

   பொள்ளாச்சி வழியாக தினசரி இயக்கப்படும் மதுரை - கோயம்புத்தூர் ரயில் வேகம் அதிகரிப்பு!!

  மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் (16722) தற்போது மதுரையிலிருந்து காலை 07. 25 மணிக்கு புறப்பட்டு மதியம் 12. 45 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேருகிறது. இந்த ரயிலின் வேகம் டிசம்பர் 25 முதல் அதிகரிக்கப்பட்டு கோயம்புத்தூருக்கு மதியம் 12. 15 மணிக்கு சென்று சேருமாறு கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 நிமிடம் பயண நேரம் குறைகிறது. எனவே இந்த ரயில் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்கலம், பொள்ளாச்சி , கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் முறையே காலை 09. 15, 09. 24, 09. 40, 08. 53, 10. 01, 10. 06, 10. 15, 10. 28, 10. 53 , 11. 05, 11. 30 மணிக்கு புறப்படுகிறது. 

இந்த ரயில் நிலையங்களில் நடப்பிலிருக்கும் கால அட்டவணைப்படி உள்ள புறப்படும் நேரத்திற்கு மேலும் முன்னதாக புறப்படும்படி மாற்றப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயில் (16721) கோயம்புத்தூரில் இருந்து மதிய 02. 05 மணிக்கு புறப்பட்டு இரவு 07. 35 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. தற்போது இந்த ரயிலின் கோயம்புத்தூர் புறப்படும் நேரம் மதியம் 02. 40 மணியாக மாற்றப்பட்டுள்ளது. புறப்படு நேரம் மாற்றப்பட்டுள்ளதால் 35 நிமிட பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மதுரை வந்து சேரும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


Comments