கோவையில் மீண்டும் வேகமெடுக்கும் கண்காணிப்பு பணிகள்!!
வெளிநாட்டிற்கு சென்று வந்த பயணிகளை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்கள்.....
கோவை: வெளிநாட்டில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து கோவை கோபாலபுரம் பகுதியில் கோவை மாவட்ட ஆட்சியர் இன்று தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப் பட்டுள்ளனர் இதன், காரணமாக கோவை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை நோய் தொற்று பரி சோதனை செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவைக்கு வரும் பயணிகளில் பொதுவாக 2 சதவீத நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதஇப்பணிக்காக மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், ஆய்வக நிபுனர் ஆகியோர் கொண்ட 3 குழுக்கள் பணியில் இருந்து நோய் கண்காணிக்கும் பணியை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மேற்கொள்வார்கள். வெளிநாட்டிலிருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
சி.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.
Comments