கழுகுமலையில் இளம் பெண் மாயம்!!

     -MMH 

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 31). கழுகுமலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கழுகுமலை காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் கிரிஜா (27) என்பவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி கிரிஜா கழுகுமலையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். பின்பு தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாமல் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கிரிஜாவின் தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து மாயமான கிரிஜாவை தேடி வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

Comments