கோவையில் ஆரோக்கியமான வீட்டு சமையலை ஆன்லைன் வழியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் குக்கர் எனும் புதிய உணவு விநியோக செயலி துவக்கம்!!

 -MMH 

வீடு மற்றும் அலுவலகங்களில்  இருந்தபடியே ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை படிப்படியாக  கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

இந்நிலையில், இதில்  புதிய முறையாக வீட்டு சமையலை விரும்பும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப  சாதாரண வீட்டு பெண்களின் கைப்பக்குவத்தில் உள்ள உணவுகளை ஆன்லைன் வழியாக வழங்கும் விதமாக, குக்கர் எனும் புதிய உணவு விநியோக செயலியின் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செயலியின் அறிமுக விழாவின் ஒரு பகுதியாக  குக்கர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரபாகரன், இயக்குனர் சரவணன்,நிறுவனர் நிர்மல் குமார்,மற்றும் தொழில் நுட்ப பொறியாளர் ராமநாதன் அழகப்பன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். 

வீட்டு முறை உணவுகளுக்கு எப்பொழுதும்  மக்களிடையே ஒரு நல்ல வரவேற்பு உள்ளது, ஆனால் அவை அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர் களுக்கு கிடைப்பதில்லை இந்த குறையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த குக்கர் செயலியை அறிமுகம் செய்து உள்ளதாகவும், இங்கு, வீட்டில் உள்ள பெண்களே தரமான வீட்டு உணவை தயார் படுத்தும் விதமாக அவர்களது  கை வண்ணத்தில் தயாராகும் உணவுகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்துஎன்றார், ஹோம் செஃப்கள் எனப்படும் சமையல் செய்வதில் ஆர்வமுடைய வீட்டு பெண்களும் தொழில் முனைவோர்களாக மாற்றுவதே இந்த செயலியின் நோக்கம் எனவும், அதே நேரத்தில் வீட்டு சமையலின் ஆரோக்கிய உணவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை தொடர்வதே இதன் நோக்கம் என தெரிவித்தனர்.

குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் தனித்துவமான உணவுகளை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் குக்கர் ஒரு முன்னோடியாக திகழும் என நம்புவதாகவும், ஆயிரக்கணக்கான சிறு தொழில் முனைவோர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன், சேர்ந்து உருவாக்கும் உணவு வகைகளை அனைவருக்கும் மிகைபடுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த குக்கர் உதவும் என்றார்.

 உணவு துறையை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை பயண்படுத்தி வீட்டு உணவு தயாரிப்பாளர்களிடம் இருந்து தரமான உணவுகளை பெற்று, வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக கூறினார், கிராமத்தின் மனம் இனி நகரத்திலும் நுகரும் வகையில், மண் மணம் மாறாத வீட்டு முறை உணவுகள் ஓவ்வொன்றையும் கொண்டாடி மகிழுங்கள் என்று அவர் தெரிவித்தார், மேலும் வீட்டு முறை சமையல் என்பதால், உணவுகளை தயார் படுத்த சுமார் ஒன்றரை  மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்வதால் தரமான உணவுகளை வழங்க முடியும் என தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments