அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி பக்தர்கள் ஊர்வலம்!!

 

ஆனைமலை சுற்றுப்பகுதியில் உள்ள வைணவ  கோவில்களில், மார்கழி15 நாள் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், குறிப்பாக ஆனைமலை  திரௌபதி அம்மன் கோவிலில் மார்கழி 15 ஆம் நாளை முன்னிட்டு அதிகாலையில் ஆனைமலை திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து  துவங்கி பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி  ஊர்வலம்  வந்தனர். இந்த பஜனை வழிபாடு வீதி உலா  திரௌபதி அம்மன் கோவிலில் துவங்கி காமாட்சி அம்மன் கோவில் வீதி மாரியம்மன் கோவில் வீதி பெரிய கடை வீதி போன்ற முக்கிய  வீதிகளின் வழியாக மார்கழி மாத பஜனை பாடல்களை பாடி திரௌபதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments