தேவாலயத்தில் ஜன்னலை உடைத்து புகுந்து திருடிய ஆசாமிகள்!!

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் என்று பகுதியில் கடந்த  திங்கள் கிழமை பிரார்த்தனைக்கு     தூய செபாஸ்டின் தேவாலய கதவை திறந்த போது ஆலயத்தின் சன்னல் வழியாக வந்து  காணிக்கை பெட்டி உடைக்கப் பட்டுள்ளதை கண்ட போதகர் மற்றும் விசுவாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர்  கவனித்து பார்த்த போது அங்கு காணிக்கை பெட்டி மட்டுமல்லாது  பேட்டரி இன்வெர்டடர்களும் திருடப்பட்டது தெரிய வந்தது.

உடனடியாக காவல்துறைக்கு  தெரிவிக்கப்பட்டு  புகார் அளிக்கப்பட்டது. புகார் அளித்ததின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டன . இந்த  திருட்டு சம்பவம் ஞாயிற்று கிழமை சாயங்காலம் அரங்கேறியுள்ளது. இச்  சம்பவத்தில்  சைஜு மோன், தேவ ராஜ்,அகில்,ஜபில்,சுஜித், ஆன்சில் என்ற ஆறு பேரை கைதுசெய்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இவர்கள் தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார்கள் என சி சி டி வீடியோ காட்சிகள் மூலமாக மற்றும் விசாரணையில் தெரியவந்தது. இந்த குற்றவாளிகளை கைது செய்யும் போது இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களும் கைப்பற்றப்பட்டன. 

அது மட்டல்லாது இப்பகுதியில் கடந்த வாரத்தில் பல இடங்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்றவாளிகளுக்கும் மற்ற திருட்டு சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என் காவல்துறையினர் பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments