கோவையில் ஆதரவற்றவர் களுக்கான ஆபரேஷன் புதுவாழ்வு திட்டம்! காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை!!

 

     -MMH 

   கோவை கோபாலபுரம் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் புது வாழ்வு என்ற திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு நாட்களில் கோவை மாவட்ட காவல்துறையினர் பேருந்து நிலையங்கள், சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ஆதரவற்ற 110 நபர்களை அடையாளம் காணப்பட்டும், அவர்களை மீட்டு அவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களில் 43 நபர்களை காப்பகத்தில் சேர்க்கப்பட்டும், 67 நபர்களின் குடும்ப விவரங்களை சேகரித்து அவர்களின் உறவினர்களிடம் நல்ல முறையில் ஒப்படைக்கப்பட்டு அவர்களின் புது வாழ்விற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

மேலும் இதுபோன்று ஆதரவற்ற நபர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கும் பணி தொடரும் என அதில் குறிப்பிடபட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Comments