டாப்சிலிப் மாணவர்களுக்கு மருத்துவ சேவை!!

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள டாப்சிலிப்பில் அரசு மலைவாழ் குழந்தைகள் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட மலைவாழ் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகம் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். இங்கு படிக்கும் பள்ளி குழந்தைகள் மருத்துவ தேவைக்காக பல  தூரம் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


எனவே பொள்ளாச்சியில் பல்வேறு மருத்துவ சேவைகள் செய்து வரும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் சார்பில் டாப்சிலிப் மழைவால் குழந்தைகள் பள்ளியை தேர்ந்தெடுத்து சுமார் ஐந்து மருத்துவ முதலுதவி பெட்டிகள் வழங்கி உள்ளது. 

மேலும் ஆபத்து காலங்களில் எப்படி எதிர்கொள்வது போன்றவை விழிப்புணர்வுகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் டாப்சிலிப் அரசு மலைவாழ் குழந்தைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் க.வனஜா அவர்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ப.செந்தில் முருகன், சிவகாமி போன்றோர் தலைமை வகித்தனர். வனச்சரகர் சுந்தரவேல் மற்றும் வனவர் தர்மராஜ் அவர்கள் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் தலைவர்.முனைவர்.அபு.இக்பால் மற்றும் நிர்வாகிகள்,  பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இது போன்ற சமூக சேவைகளை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வரும் முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் பணிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், M.சுரேஷ்குமார்.

Comments