மூணாறில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கார்த்திகை கோலாகல திருவிழா!?

 

   கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா பகுதியான மூணாறில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  கார்த்திகை திருவிழா நேற்று துவங்கப்பட்டது.

மூணாறில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுவாகவே கார்த்திகை திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் ஆனால் கொரோனா காலகட்டத்தின் சூழ்நிலை காரணமாகவும் மற்றும் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்கும் பணி நடைபெற்றதாலும் கடைசி ஆண்டு வரைக்கும் கார்த்திகை திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்பொழுது கொரோனாவின் தடைகள் நீக்கப்பட்டு பாலம் வேலையும் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் கார்த்திகை திருவிழா கோலாகலமாக கொண்டாட திட்டமிடப்பட்டு கார்த்திகை ஒன்றான நேற்று கார்த்திகை திருவிழா துவங்கப்பட்டன.


இன்று மாலை கோவிலில் இருந்து சப்பர ஊர்வலம் புறப்பட்டு பழைய மூனார் பார்வதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்கே வந்தடையும்.

இந்த கோவிலின் சிறப்பம்சமான பூர்வ குடிகளான முதுவன்மார்கள் கோவிலாகவே இது கருதப்படுவதால் அவர்கள் சிறப்பு பூஜை செய்ய இன்று கோவிலில்  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன். மூணார்.

Comments