கோவைக்கு விமானத்தில் வந்த ஆதரவற்ற மாணவர்களை வரவேற்ற அதிகாரிகள்!

 

  -MMH   

   கோவைக்கு விமானத்தில் வந்த ஆதரவற்ற மாணவர்களை வரவேற்ற அதிகாரிகள்!

தனியார் சமூக அமைப்பு அண்மையில் சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் ஆய்வு நடத்தியது. அங்கு வசிக்கும் பல குழந்தைகளுக்கு தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பெரும் ஆவலாக இருந்தது. அத்தகை குழந்தைகளின் கனவை நனவாக்க தனியார் சமூக  அமைப்பானது தனியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வானமே எல்லை என்ற ஒரு நாள் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதற்காக ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 குழந்தைகள், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்துவரப்பட்டனர். இதில் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவரும், ஒரு திருநங்கை மாணவியும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்திறங்கிய மாணவ மாணவிகளை கோவை விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், வருவாய் பிரிவு அதிகாரி பூமா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


பின்னர் கோவை அறிவியல் மையம், ஜி.டி நாயுடு அருங்காட்சியகம் மற்றும் உக்கடம் குளக்கரையில் உள்ள ஐ லவ் கோவை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்து மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் இரவு மீண்டும் கோவையில் இருந்து சென்னைக்கு ரயிலில் அழைத்து செல்லப்பட உள்ளனர்.

சென்னையில் இருந்து 26 மாணவர்கள் வந்துள்ளனர். அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.இதேபோன்று கோவையில் இருந்து 37 மாணவர்கள் சென்னை சென்றனர். அவர்கள் அங்கு சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். என்றார்!!

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments