வால்பாறையில் யானைகள் கூட்டம் தேயிலை பறிக்க தடை சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை வனப் பகுதிக்கு கேரளா மாநிலத்தில் இருந்து மளுக்கப்பாறை, பன்னிமேடு வழியாக இடம் பெயர்ந்து வரும் யானை கூட்டம் 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

உருளிக்கல், சேக்கல்முடி, நடுமலை, சின்னக்கல்லார், மாணிக்கா, நல்லகாத்து, பன்னிமேடு, சங்கிலிரோடு, பச்சமலை, சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட்களில்  முகாமிட்டுள்ளன.

பருவமழைக்கு பின் யானைகள் இடம் பெயர்தல் அதிகரித்துள்ளது. நல்லகாத்து எஸ்டேட் பகுதியில்  யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் தேயிலை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் யானைகளை தொந்தரவு செய்யாமல் தொலை துாரத்தில் இருந்து கண்டு ரசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யானைக்கு மிக அருகில் சென்று, செல்பி எடுப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

-M.சுரேஷ்குமார்.

Comments