ஆயுதங்களுடன் கஞ்சா கடத்தல் !! வாகன தனிக்கையில் பாலக்காடை சேர்ந்த நான்கு பேர் கைது!!

 

   -MMH 

  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா எல்லையில் சிறப்பு அதிகாரிகள் வாகன தணிக்கை நடத்திய போது பாலக்காடு திருவிழம்முண்னு என்ற பகுதியில்  இருந்து தோடுப்புழாவிற்கு காரில்  வந்த நான்கு நபர்கள் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களுடன் கஞ்சா மற்றும் போதை பொருட்களுடன் சிக்கினர்.


ஆயுதங்களுடன் கஞ்சாவை கடத்தி வந்ததற்காக நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் சாஜகான், சுல்பிக், முகமது சவுகத் அலி, பீர் அலி ஆகியோரை கைது செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். 

முதல் கட்ட விசாரணையில் வந்த நான்கு பேரும் 110 கிராம் கஞ்சாவை கொண்டுவந்துள்ளனர்.  தரத்தை காண்பித்து வியாபார ஒப்பந்தம் செய்ய வந்ததாக அறியப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தொடர்ந்து விசாரணை  நடந்துவருகிறது. இதில் பல உண்மைகள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஜான்சன் மூணார்.

Comments