நொய்டாவில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் 22தேதி வரை மின்சாரம் தொடர்பான எலெக்ராமா கண்காட்சி நடைபெற உள்ளது!

 

-MMH

நொய்டாவில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் 22தேதி வரை  மின்சாரம் தொடர்பான எலெக்ராமா கண்காட்சி நடைபெற உள்ளதாக இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக மின்சாரத் துறையின் மூத்த அதிகாரிகளுடன், இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ரோகித் பதக் கூறுகையில் மின்சாரம் தொடர்பான தீர்வுகள், மின்சாரப் பொருட்கள், உபகரணங்கள், தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்டில் வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் எலெக்ராமா 2023 கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் கனடா பிரான்ஸ் ஜெர்மனி ருமேனியா தைவான் இங்கிலாந்து உள்ளிட்ட 70 நாடுகளைச் சேர்ந்த  நிறுவனங்கள்,பொறியாளர்கள் மற்றும் 5லட்சம்  பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் இந்த கண்காட்சி மூலம் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள வர்த்தக விவரங்களை அறிந்து கொள்ள இலக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் தூய்மையான மின்சார பயன்பாட்டை கொண்டு வருவதன் மூலம் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையை மேம்போடும் எனவும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சவால் விருதுகள் அறிமுகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர். தொழில் நகரமான கோவையிலிருந்து கண்காட்சி குறித்து ஆலோசனை கூட்டத்தை நடத்துவதாகவும் இந்த கண்காட்சியில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது அச்சங்கத்தின் தென் மண்டல தலைவர் பிரகாஷ்,எலெக்ராமா 2023 கண்காட்சியின் தலைவர் ஜிதேந்திர அகர்வால், தென் மண்டல துணைத் தலைவர் சுதிர் கோகலே, மாநில ஒருங்கிணைப்பாளர் அருணா ஜனார்த்தனன் ஆகியோர் உடனிருந்தனர்.

-சீனி போத்தனூர்

Comments