ஆட்டோவை வழிமறித்து செல்போன் பறிப்பு - இளஞ்சிறார் உட்பட 2பேர் கைது!

 

-MMH

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் ரத்தினம் (65). என்பவர் நேற்று பூப்பாண்டியாபுரத்தில் இருந்து தனது உறவினர் ஒருவருடன் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது 3பேர் கொண்ட கும்பல், ஆட்டோவை வழிமறித்து அரிவாளைக் காட்டி மிரட்டி ரத்தினம் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்று விட்டது. 

இதுகுறித்து ரத்தினம் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, புதிய முனியசாமி புரத்தைச் சேர்ந்த முத்துராஜ் மகன் அந்தோணி சூர்யா (22), மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தார்.  அவர்களிடம் இருந்து செல்போன், 2 அரிவாள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மேலும் ஒரு இளஞ்சிறாரை போலீசார் தேடி வருகி்னறனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

 ஶ்ரீவைகுண்டம் நிருபர்,

-முத்தரசு கோபி.

Comments