தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறையினா் அதிரடி நடவடிக்கை!! உரிமம் இல்லாமல் இயங்கிய பால் விநியோக கடைக்கு சீல் !! 356 லிட்டா் பால், தயிா் பறிமுதல்!!!

-MMH

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா் சக்திமுருகன், அடங்கிய குழுவினா் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு உள்ள தனியாா் விநியோக கடைக்கும், அங்கு பால் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உரிமம் இல்லாதது கண்டறியப்பட்டது. எனவே, அந்த நிறுவனத்திலிருந்த சுமாா் 356 லிட்டா் பால் மற்றும் தயிா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும்,  அந்நிறுவனத்தின் இயக்கத்தை நிறுத்தி வைத்தும் உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-முத்தரசு, கோபிஶ்ரீவைகுண்டம்.

Comments