பத்திரிக்கையாளர்களுக்கு ரூ.5ஆயிரம் ஊக்கத் தொகை தமிழக அரசுக்கு கோரிக்கை!

-MMH

பொங்கல் பண்டிகை, தீபாவளியை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5ஆயிரம்  தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் (TUJ) கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தூத்துக்குடி மாநகர் மாவட்ட கூட்டம் தலைவர் சக்தி ஆர். முருகன் தலைமையில் தூத்துக்குடி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் வழங்கப்படும் பத்திரிக்கையாளர்கள் நலன் சார்ந்த அனைத்தும் கால தாமதமின்றி வழங்க வேண்டும், தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை, தீபாவளி பண்டிகை ஆகிய விழாக் காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தில் அதிக உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர், 
-முனியசாமி.

Comments