இருதயம்,சர்க்கரை நோய்,அல்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த,விழிப்புணர்வு கருத்தரங்கம்!

-MMH

 இருதயம்,சர்க்கரை நோய்,அல்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த,விழிப்புணர்வு கருத்தரங்கம் ஸ்நேகாராம் பல்நோக்கு மருத்துவமனை சார்பாக நடைபெற்றது.

கோவை செல்வபுரம் பகுதியில் உள்ள ஸ்நேகாராம் பல்நோக்கு மருத்துவமனை சார்பாக முதலாம் ஆண்டு மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.பேரூர் சாலை,மார்ட்டின் அபார்ட்மென்ட் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராம்ஸ் ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்ற இதில்,ஸ்நேகராம் பல்நோக்கு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இதில்,திருமதி.தீபா விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். 

கருத்தரங்கில் நெஞ்சுவலி அது குறித்த மன பயம் அதை எப்படி தவிர்ப்பது என இருதயம் மற்றும் அடைப்பு நீக்கும் நிபுணர் டாக்டர் சதீஷ்குமார் விளக்கம் அளித்தார் இதனைத் தொடர்ந்து  அல்சர் மற்றும் அதன் விளைவுகள் குறித்து உணவுக் குழல் மற்றும் உள்நோக்கு மருத்துவ நிபுணர் டாக்டர் ராஜா விளக்கவுரை நல்கினார் இதேபோல சர்க்கரை நோய்  கால் புண் சிறப்பு தடுப்பு பராமரிப்பு குறித்து டாக்டர் தமிழ்ச்செல்வன் பேசினார். சிறுவர் முதல் பெரியவர் வரை வரும் திடீர் வயிற்று வலி மற்றும் அது குறித்த தீர்வு குறித்து டாக்டர் விசுவநாதன் விளக்கமளித்தார்.

மேலும் அதீத செல்போன் பயன்பாட்டால் சிறுவர்  சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் நல சிறப்பு நிபுணர் டாக்டர் உமா சங்கர் கருத்துரை வழங்கினார்..நிகழ்ச்சியில்,மூத்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரெங்கநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக,கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா,முன்னால் டீன் டாக்டர் அசோகன்,தி.மு.க.வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி,மற்றும் செல்வபுரம் பகுதி தி.மு.க.பிரமுகர் டி.பி.எஸ்.ரவி என்கிற பூபாலன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் மருத்துவ சேவையில் சிறந்து செயல்பட்டு வரும் டாக்டர் விஸ்வநாதனுக்கு லயன்ஸ் கிளப் 324 சி மாவட்ட செய்தி தொடர்பு தலைவர் செந்தில் குமார்,நாளைய யுகம் செய்தி தொடர்பு அதிகாரி வெங்கடேஷ்,மற்றும் சுப்ரமணியன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்…நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் இணைந்து புத்தாண்டு கேக் வெட்டி மகிழ்ந்தனர்.இறுதியில் மருத்துவர்கள் அஸ்வின் மற்றும் கோகுல் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

- சீனி,போத்தனூர்.

Comments