இடுக்கியில் காட்டு யானையின் அட்டகாசங்கள்!!

கேரள மாநிலம் இடுக்கியில் மூணார் பகுதியான சின்னகானல் மற்றும் பூப்பாறை பகுதிகளில் காட்டு யானை அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது.

இதனால் வயநாட்டில் காட்டு யானையை மயக்கவெடி வைத்து பிடித்தது போல இடுக்கியிலும் பல உயிர்களை பறித்த சில்லிகொம்பனை பிடிக்க வலியுறுத்தபடுகிறது.

இதற்காக சாந்தாம்பாறை பஞ்சாயத்து  சி எப் எப் க்கும் வனத்துறையினர்க்கும் கடிதம் கொடுக்கபட்டுள்ளது. இது 40க்கும் மேற்பட்ட உயிர்களை எடுப்பதால் அங்கே வாழும் ஜனங்கள் அச்சம் அடைகின்றனர். மற்றும் பல வீடுகளை நொறுக்கி போடுகிறது.

தற்போது ஆனையிரங்கள் சின்னகானல் பகுதிகளில் கூட்டமாகவும் தனியாகவும் உலா வருகிறது.இதை வனத்துறையினர் சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமாறு அப்பகுதி மக்கள் கேட்டுள்ளனர்.

-விஜய், மூணார்.

Comments