சோமந்துறை சித்தூரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்!!

திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில் சோமந்துறை சித்தூரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் அனைத்து வயதினருக்கும்  இலவசமாக கண் பரிசோதனை  பார்க்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் நரம்பு மற்றும் தோல் வியாதிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. 

மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது இந்த மருத்துவ முகாம் திருக்குமரன்மாரிமுத்து தலைமையிலும் பீட்டர் ரூபன்ஸ் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் திருக்குமரன் செந்தில், செயலாளர் தளபதிநாகராஜ், பொருளாளர் லோகநாதன்,

துணைத் தலைவர் முத்துசாமி, தினேஷ், இணைச் செயலாளர் எஸ் மணிகண்டன், சுப்பிரமணி மாரிமுத்து சார்லஸ் ஹரி தருண் கவின் விஜயகுமார் ஆனந்தகுமார் நவீன்குமார் அருள்செல்வன் பிரவீன்குமார் சுரேஷ் ரகுபதி மோகன்ராஜ் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள்  கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த முகாமினை திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாடு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் முன்னேற்றச் சங்கத்தினர்  ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-அலாவுதீன், ஆனைமலை.

Comments