பாபநாசம் ராஜகிரி ஊராட்சியில் காசிமியா மேல்நிலைப் பள்ளியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்!
பாபநாசம் ராஜகிரி ஊராட்சியில் காசிமியா மேல்நிலைப் பள்ளியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்!
பாபநாசம் வட்டம் ராஜகிரி ஊராட்சி காசிமியா மேல்நிலைப் பள்ளியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் வெறிநோய் தடுப்பு மற்றும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் (05.01.23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பாபநாசம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மமக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, ராஜகிரி ஊராட்சி மன்றத் தலைவர் முபாரக் உசேன், ஜமாஅத் தலைவர் யூசுப் அலி, கால்நடை மருத்துவர்கள் ஏஞ்சலா, சங்கமித்ரா, மாவட்ட கவுன்சிலர் பாத்திமா ஜான் ராயல் அலி, மமக மாநில விவசாய அணி செயலாளர் ரஹ்மத் அலி, மமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், பாபநாசம் ஒன்றிய தலைவர் கலீல் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக-மைதீன்.தஞ்சை.
Comments