கோவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை!!

-MMH

கோவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை!! கோவை மாவட்ட அறங்காவலர் குழுவினர்  பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

கோவில்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும்,நிகழ்ச்சிகள்  மற்றும் குடமுழுக்கு விழாக்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து நடத்த, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை   அறங்காவலர் குழுவினர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில்,தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக ராஜா என்ற ராஜாமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம், .கர்ணபூபதி,தனபால், செந்தில்குமார் ஆகியோர், தேர்வு செய்யப்பட்டனர். புதிய குழுவினர் பதவி ஏற்பு விழா, கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள  அருள்மிகு.கோனியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி  ஆணையர் கருணாநிதி புதிய தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களுக்கு பதவிப்  பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னால் எம்.எல்.ஏ. கார்த்திக் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர்  ரவி, வடக்கு மாவட்ட அவைத்தலைவர்  புருசோத்தமன், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் வே. பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர்கள்  உதயகுமார், குப்புசாமி,மணிகண்டன்,சரஸ்வதி புஷ்பராஜ், நோயல் செல்வம்,பெரிய கடைவீதி பகுதி -1 செயலாளர் பதுருதீன்,அறநிலையத் துறை. அதிகாரிகள்,கழக நிர்வாகிகள்,உட்பட கலந்து கொண்டனர்.

-சீனி போத்தனூர்.

Comments