பெண்களுக்கான சக்ரா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி, கோவை டயமண்ட் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது.!

-MMH


ரோட்டரி கிளப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் சார்பாக பெண்களுக்கான சக்ரா நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி கோவை டயமண்ட் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் சார்பாக சமூகத்தில் நலிந்த மற்றும் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு என கல்வி ,மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களுக்கு நிதி திரட்டும் வகையில்   தொடர்ந்து பதினெட்டாவது ஆண்டாக நடைபெறும் கிரிக்கெட் தொடர் போட்டி பூசாரிபாளையம் டயமண்ட் சிட்டி மைதானத்தில் நடைபெற்றது. சக்ரா நினைவு கோப்பை என பெண்களுக்கு மட்டும் நடைபெற்ற இந்த போட்டியை எஸ்.எஸ்.வி.எம்.பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை துவக்கி வைத்தார்.நான்கு ஓவர் போட்டிகளாக நடைபெற்ற இதில்,ஏழு அணிகள் கலந்து கொண்டு விளையாடின.வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளதாக ரோட்டரி கோயமுத்தூர் ஸ்பெக்ட்ரம் தலைவர், பத்ரிநாத் மற்றும் செயலாளர் லட்சுமண பிரசாத் ஆகியோர் தெரிவித்தனர்.
-சீனி போத்தனூர்

Comments