கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநாடு!!

     -MMH 

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கம் மாநாடு,மாநில தலைவர் நாராயணன் பங்கேற்பு!!

   கோவை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு  கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில  தலைவர் நாராயணன் கலந்து கொண்டார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


 தரமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாத்தல், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், சங்கத்தின் சேவைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துதல்,மகளிர் நலன் மற்றும் அவர்களை வலிமைப்படுத்துதல், வணிகம் மற்றும் தொழில் முனைவோர் பலம் பேணுதல்,பிறந்தநாள் சமூக அனைத்து உட்பிரிகளையும் சங்கத்தில் இணை செய்தல்,

உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் ஆலோசனை, பிரம்மா சமுத்திரக்கு அனைவருக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.


Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

இந்த மாநாட்டில் செய்தியாளரிடம் பேசிய மாநில தலைவர் நாராயணன்,தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ததை ,தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும்,அறநிலையத்துறை கோவிலிகளில் தன்னாட்சி வாரியம் அமைக்கப்பட்ட வேண்டும் எனவும் கேரளா அரசு போல நலிந்தோர்க்கு நலவரியத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இதில் பிரபல பேச்சாளர்  பாரதி பாஸ்கர், டாக்டர் அஸ்வின் மோகன், பேராசிரியர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மற்றும் முக்கிய பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

- சீனி,போத்தனூர்.


Comments