நீர்வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதித்தது வனத்துறை...!!!

 

கோவை மாவட்டம்  ஆனைமலை அடுத்த ஆழியார் அணை, ஆழியார் பூங்கா மற்றும் கவி அருவி ஆகிய பகுதிகள்  முக்கிய சுற்றுலா தளங்கள் ஆகும். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதிக அளவில் வந்து குளித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் தொடர் விடுமுறையொட்டி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கவி அருவிக்கு படையெடுத்து குளித்து மகிழ்ந்தனர் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததன் காரணமாக ஆழியார் கவி அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனை அடுத்து ஆழியார் கவியருவி செல்ல நேற்று (28/01/2023)  முதல் சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments