கோவையில் பரபரப்பு கிணற்றை காணவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!!

பேரூர் தீத்திபாளையம் பகுதிக்குட்பட்ட  விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் மனு அளிக்க  கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மனுவில்:

தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். 

இதனை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மனை பிரிவுகளில் உள்ள கிணற்றையும் காணவில்லை. எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைப்பதோடு கம்பி வேலியிட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காணவில்லை காணவில்லை

கிணற்றை காணவில்லை என்ற விளம்பரப் பலகையுடன் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் வந்ததால் ஆட்சியர் அலுவலகமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments