தாம்பரம் மாநகராட்சியின் கனிவான பார்வைக்கு சமூக ஆர்வலரின் வேண்டுகோள்!!!!

 
 -MMH 

தாம்பரம் மாநகராட்சியின் கனிவான பார்வைக்கு சமூக ஆர்வலரின் வேண்டுகோள்!!!!

  குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் உள்ள உணவகங்கள் வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி சாலையிலும் அருகில் உள்ள தெருக்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக சட்டத்துக்கு புறம்பாக வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். மேற்படி நிறுவனங்களுக்கு 99% சதவீதம் சரியான வாகன நிறுத்துமிடம் இல்லாமல் இயங்குவது இதற்கு காரணமாக உள்ளது. 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


ஜிஎஸ்டி சாலையின் தற்போதைய அவல நிலைக்கு காரணம் தாம்பரம் மாநகராட்சியே!  இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஒரு எட்டு அடுக்கு கட்டிடத்தில் இயங்கி வரும் வணிக நிறுவனம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு பாதாள சாக்கடை இணைப்பு இல்லாமல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

சில கட்டிடங்கள் வாகன நிறுத்துமிடம் என்று வரைபடத்தில் அனுமதி பெறப்பட்ட இடங்களில் உணவகங்களுக்கு வாடகைக்கு  விடப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகின்றன. சில உணவகங்கள் முறையாக கழிவுநீர் இணைப்பு இல்லாமல் கழிவு நீரை நெடுஞ்சாலை துறையின் மழை நீர் வடிகாலில் செலுத்தும் அவலம் நடந்து வருகிறது, இதயும் கண்டுகொள்ளாத தாம்பரம் மாநகராட்சி முதன்மை சுகாதார அலுவலர்.


மேற்படி உணவகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர் வாகனங்கள் ஜிஎஸ்டி சாலையிலும் அருகில் உள்ள தெருக்களிலும் போக்குவரத்துக்கு இடையூறாக  நிறுத்தி விடுகின்றனர். இவற்றால் தினந்தோறும் காலை மாலை வேலைகளில் ஜிஎஸ்டி சாலை மற்றும் அருகில் உள்ள தெருக்களிலும் கடுமையான போக்குவரத்து

நெரிசலுக்கு உள்ளாகி வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  சட்டத்திற்கு புறம்பான  வாகன நிறுத்தங்களை வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குறித்து தாம்பரம் மாநகராட்சி மற்றும் குரோம்பேட்டை போக்குவரத்து காவல்துறைக்கும் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. 

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

போக்குவரத்து காவல்துறையினர் கடந்த மூன்று மாதங்களில் ஜிஎஸ்டி சாலையின் குரோம்பேட்டை பகுதியில் சுமார் 8000 விதி மீறி சாலையில் நிறுத்திய வாகனங்களுக்கு, வழக்குகள் பதிவு செய்து மூன்று லட்சத்திற்கு மேல் அபராதமாக பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியதும், குறிப்பிடத்தக்கதும்.

வாகன நிறுத்தம் இல்லாமல் மற்றும் வாகன நிறுத்தங்களை வணிக பயன்பாட்டுக்கு மாற்றிய கட்டிட உரிமையாளர்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயத்திற்காக கண்டும் காணாமல்  இருக்கும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் நகரமைப்பு அதிகாரிகள், கட்டிட உரிமையாளர்களுக்கு அவ்வப்போது ஒரு  பழைய வெள்ளைக்காரன் போட்ட இத்துப்போன சட்டத்தை மேற்கோள் காட்டி அறிவிப்பு (Notice) வழங்கிவிட்டு அதற்கு மேல் நடவடிக்கை எடுக்காமல் மக்களையும் மாண்புமிகு நீதிமன்றங்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், இது வன்மையான கண்டனத்துக்குரிய செயலாகும்.


தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் நீதிமன்றங்களில் அறிவிப்பு வழங்கி விட்டோம் என்று மீண்டும், மீண்டும் சொல்லி தப்பித்துக் கொள்வதை தவிர்த்து விதி மீறி வாகன நிறுத்தங்களை வணிக பயன்பாட்டிற்கு உள்ளாக்கி இருக்கும் கட்டிடங்களுக்கு பூட்டு முத்திரை (Lock & Seal) நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-செந்தில் முருகன்,சென்னை தெற்கு.


Comments