மக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதை அமைக்க பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தல்

     -MMH 

   தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற (04.01.23) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு உரையாற்றினார். 

பாரம்பரிய பெருமை மிக்க கல்லணை - பூம்புகார் சாலையை மறித்து கொட்டையூரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் NHAI, விக்கிரவாண்டி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைந்துள்ளது. இதனால் 1 கிமீ தூரத்திற்கு பயணிகள் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மக்கள் கோரிக்கை அடிப்படையில் உடனடியாக மறிக்கப்பட்ட இடத்தில் வாகனங்கள் நேராக செல்வதற்கு ஏதுவாக அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 


https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru


 இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Please Subscribe to This Channel to get current news ↓


நாளைய வரலாறு செய்திகளுக்காக 

மைதீன் தஞ்சை.


Comments