கிராமமே வக்பு வாரிய சொத்தா? அதிர்ச்சியில் கிராம மக்கள்.


  -MMH
 

கிராமமே வக்பு வாரிய சொத்தா? அதிர்ச்சியில் கிராம மக்கள்.

திருப்பூர் அருகே அரசு கட்டடம் வீடுகள் தோட்டங்கள் என 65 ஏக்கர் நிலமும் 'வக்பு' வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சார் - பதிவாளர் அலுவலகத்தை நேற்று முறையிட்டனர். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள வடுகபாளையம் கிராமத்தில் விவசாய விளை நிலங்கள் மானாவாரி நிலம் குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன.இதில் பல்வேறு புல எண்களை குறிப்பிட்டு 65 ஏக்கர் நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது; அந்த பகுதியில் உள்ள நிலங்கள் மீது பரிவர்த்தனை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளக்கூடாது என வக்பு வாரியம் வாயிலாக பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊத்துக்குளி சார் - பதிவாளர் அலுவலகத்திலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் வடுகபாளையம் பகுதி நில உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் நேற்று காலை ஊத்துக்குளி சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உரிய விளக்கம் மற்றும் நடவடிக்கை கோரி மனு அளித்தனர்.வடுகபாளையம் கிராம மக்கள் கூறியதாவது;-

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

வடுகபாளையம் ஊராட்சியில் 20 ஆண்டுகளாக 400க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசிக்கின்றனர். உரிய ஆவணங்கள் வாயிலாகத் தான் அந்த நிலங்கள் கிரயம் பெற்று அனுபவித்து வருகிறோம்.தற்போது திடீரென 'இது வக்பு வாரிய சொத்து; எந்த பரிவர்த்தனையும் செய்யக் கூடாது' என்று அறிவித்துள்ளனர். இந்த தடையை விலக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீவிர போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகாக 

-பாஷா.

Comments