எழுந்து நில், நட என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு செயற்கை கால் வழங்கும் விழா.

 

-MMH

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore DownTown) சார்பில் செயற்கை கால் வழங்கும் விழா. ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் (Rotary Club of Coimbatore DownTown) சார்பில் ஏழை குழந்தைகளுக்கு “எழுந்து நில், நட” என்ற திட்டத்தின் கீழ் செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள   கிராண்ட் ரீஜன்டில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் 150 செயற்கைகள் கால்கள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி 3201"ன் பதவி ஏற்கவுள்ள ரோட்டேரியன் என். சுந்தரவடிவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த திட்டம் குறித்து நிகழ்ச்சியில் பேசிய  ரோட்டரி மாவட்டம் 3201"ன் இளைஞர் சேவை பிரிவு மாவட்ட தலைவர் ரோட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம் கூறியதாவது 

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுனின் முக்கிய திட்டமான “எழுந்து நில், நட” என்ற இந்த திட்டத்தை எங்களுடைய ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்பத்தூர் டவுன்டவுன் கிளப் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.  

இதுவரை சுமார் 100 பயனாளிகள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று உள்ளனர். இந்த ஆண்டு ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுனுடன் ஆனைமலை டொயோட்டா நிறுவனமும், ஏசியன் ஃபேப்ரிக்ஸ் நிறுவனமும் இணைந்து அவர்களுடைய சமூக பொறுப்புனர்வு நிதியை, தங்களின் பங்களிப்பாக இந்த திட்டத்திற்கு தந்துள்ளார்கள். இன்று இந்த திட்டத்தில் சுமார் 150 செயற்கைக் கால்களை வழங்கப்பட்டது. 

இந்த திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன்  சார்பில் மூன்று செயற்கை கால் அளவு எடுக்கும் முகாம் நடைபெற்றது. முதல் முகாமில் சுமார் 69 பயனாளிகளுக்கும், இரண்டாவது முகாமில் 28 பயனாளிகளுக்கும், மூன்றாவது முகாமில் 35 பயனாளிகளுக்கும் செயற்கை கால் அளவு எடுக்கப்பட்டது. 

மேலும் கோவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளான அவினாசி, திருப்பூர், ஈரோடு போன்ற பல்வேறு பகுதிகளில் முகாம்களை நடத்தி சுமார் 35 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்று 150 செயற்கைக் கால்களை ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் டவுன்டவுன் சார்பில் வழங்கி இருக்கின்றோம்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 100 செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 150 செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 50 குழந்தைகளுக்கு சிறப்பு செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி போத்தனூர்.

Comments