வடவள்ளி அருகே ஆசிரியை வீட்டில் நகை திருட்டு!!

 

    -MMH 

வடவள்ளி அருகே ஆசிரியை வீட்டில் நகை திருட்டு!!

  கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள சுண்டப்பாளையம் ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 42). இவர் வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய கணவர் அன்பு சிவா இவர்களது மகன் சர்வேஷ் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நேற்று காலை வழக்கம்போல் பாக்கியலட்சுமி, தனது மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் பணிக்கு சென்றார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று  பார்த்தபொழுது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பெயரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments