மூணார் அருகே சவர்மாவால் வந்த சோதனை?

 

-MMH

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள நெடுங்கண்டம் என்ற பகுதியில் புது வருடம் ஒன்றாம் தேதி  விவின் என்பவரது மகன் ஆன்லைனில் கேமல் ரெஸ்டோ என்ற கடையில் மூன்று பேருக்கு சவர்மா ஆர்டர் செய்துள்ளனர் ஆர்டரின் பெயரில் வந்த சவர்மாவை சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே மூன்று பேருக்கும் உடல்நல குறைவு  ஏற்பட்டதால் நெடுங்கண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றனர். அவர்கள் சாப்பிட்ட சவர்மா சுகாதாரமற்றதாகவும் அதனால்தான் உடல்நல குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் கூற விவேக்  என்பவர் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த குற்றச்சாட்டின் பேரில் அங்கு நேரடியாக சென்ற சுகாதார துறையினர் ஆய்வு செய்தபோது கடையில் பாத்திரங்களும் உபயோகப்படுத்தும் இடங்களும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் சுகாதாரம் அற்று இருப்பதாக கண்டறியப்பட்டது.

அது மட்டுமல்லாது இந்த கடையானது முறையான லைசன்ஸ் வாங்காமல் நடத்துவதாக தெரியவந்துள்ளது உடனே இதனை சீல் வைக்க சுகாதார ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார். மட்டுமல்லாது கடைகளில் இருந்து உணவுகளை வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்கள் உணவு சரியாக முறையாக சுகாதாரம் உள்ளதாக உள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும் என்றும் ஹோட்டல் வைத்திருப்பவர்கள் மக்களுக்கு நல்ல சுகாதாரமான உணவை அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.

-ஜான்சன் மூணார்.

Comments