விவசாயிகள் குறைதீர கூட்டம்!! மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!!!

-MMH

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதம் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.அதன் தொடர்ச்சியாக நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அடுத்த மாதம் கூட்டம் 10.30 மணி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 

 அப்போது பருவமழை குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் உளுந்து பயிர்கள் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டு, மகசூல் மற்றும் தரம் மிகவும் குறைந்துள்ளது. எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021- 22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பனை பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 50 லட்சம் நிதியில் பனங்கருப்பட்டி மற்றும் பனங்கற்கண்டு ஆகியவற்றில் கலப்படத்தை கண்டறிவதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டுகள் கிடைக்கவில்லை' என்று தெரிவித்தனர்.

அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டுத் தொகை இந்த மாதத்துக்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி கலெக்டர்கள் கவுரவ் குமார் (தூத்துக்குடி), மகாலட்சுமி (கோவில்பட்டி), புகாரி (திருச்செந்தூர்), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சிவகாமி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Comments