தூத்துக்குடி புலனாய்வு பிரிவின் அதிகாரிக்கு ஜனாதிபதி விருது!!

-MMH

இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் மத்திய மறைமுக வரி வாரியம், சுங்கத்துறை, மத்தியவருவாய்புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் பணியாற்றும் துறைகளில் அச்சுறுத்தல்களை கடந்து, துணிவுடன் பணியாற்றும் மத்திய அரசின் அதிகாரிகள், அலுவலர்களின் சிறப்பான சேவைக்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா முழுவதும் பணியாற்றி வரும் அதிகாரிகள் 29 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில்  சென்னை கோவை  உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிவரும் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னை மண்டல மத்திய வருவாய்புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி பிரிவில் பணியாற்றி வரும் மூத்த புலனாய்வு நுண்ணறிவு அதிகாரி முரளிக்கும் ஜானாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பல்வேறு சம்பவங்களில் பல கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக அவருக்கு ஜனாதிபதிவிருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முத்தரசு, கோபிஶ்ரீவைகுண்டம்.

Comments