தூத்துக்குடியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக வைத்திருந்த ரூ.66 ஆயிரம் மதிப்பிலான ஜாக்கிகளை திருடிய 3 பேரை போலீசார் கைது!!

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பாதாள சாக்கடை நடைபெற்று வரும் பகுதியில் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த 22 ஜாக்கிகள் கடந்த 24.12.2022 அன்று திருடுபோயுள்ளது.

இதுகுறித்து காண்ட்ராக்டரான முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சர்க்கரை மகன் பாலமுருகன் (40) என்பவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த தவசிமுத்து மகன் மாதவன் (34), தெர்மல்நகர் கேம்ப் I பகுதியைச் சேர்ந்த லசால் மகன் ஜெய பென்சிங் (40) மற்றும் முத்தையாபுரம் பி.டி ஆறுமுகம் தெருவை சேர்ந்த முருகன் மகன் மாசானமுத்து (37) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜாக்கிகளை திருடியது தெரியவந்தது. 

இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.66ஆயிரம் மதிப்பிலான 22 ஜாக்கிகளையும் பறிமுதல் செய்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments