இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7லட்சம் மதிப்புள்ள பீடி இலை பறிமுதல்!! - ஒருவர் கைது!!

-MMH

காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், முதல் நிலை காவலர் வீரபாண்டியன் மற்றும் உட்கோட்ட குற்ற பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தலைமை காவலர்கள் ராஜ்குமார், இசக்கியப்பன், சொர்ண ராஜா, முதல் நிலைக் காவலர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று இரவு வந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காயல்பட்டினம் வாவு கல்லூரிக்கு எதிர்புறம் கடற்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மகேந்திரா பொலிரோ பிக்அப் நான்கு சக்கர வாகனத்தில் இருந்து சிலர் பண்டல்களை இறக்க முயன்றுள்ளனர். 

அப்போது போலீசாரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து போலீசார் வாகனத்தை சோதனை நடத்தினர். இதில் சுமார் 30 கிலோ எடையுள்ள 44 பண்டல்களில் 1,320 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பீடி பண்டல்களின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து, டிரைவர் நெல்லை மாவட்டம் தேவர்குளம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த வின்சென்ட் மகன் தர்மராஜ் என்பரை கைது கைது செய்து, பீடி இலை பண்டல்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.

Comments