சிங்கவால் குரங்குகளின் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை என பொதுமக்கள் புகார்!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் எம்ஜிஆர் நகர் அண்ணா நகர் கோப்பரட்டி காணொளி ஆகிய பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன .  வீடுகளில் ஆளில்லாத நேரம் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் சென்று வீட்டில் உள்ள பொருட்களை அதிக அளவு சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

மேலும் கடை தெருவில் உள்ள கடைகளில் உள்ளே புகுந்து அங்கே உள்ள பொருட்களை எடுத்து நாசம் செய்கின்றன.இதனை கண்டு அப்பகுதி மக்களும் வியாபாரிகளும் மிகுந்த அச்சம் அடைந்துள்ளார்கள். வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மிகுந்த வேதனையுடன் நிம்மதி இன்றி உள்ளனர். எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சி.ராஜேந்திரன்.

Comments